வீடு தேறும் தேசியக்கொடி இயக்கம் !
வீட்டுக்கு வீடு தேசியக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துமாறு இந்திய மக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் !
இதுகுறித்த பிரதமர் அவரது டுவிட்டர் தொடர் பதிவுகளில், 75வது " சுதந்திர தின விழாவை இந்த ஆண்டு நாம் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இடையே உங்களின் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள் என கூறியுள்ளார்.
இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும்.1947ம் ஆண்டு "ஜூலை" 22 நமது வரலாற்றில் தனிச்சிறப்பு உடையதாகும். இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நமது மூவர்ணக்கொடியோடு தொடர்புடைய குழு பற்றிய விவரங்கள், முதலாவது தேசியக்கொடியை பறக்கவிட்டது உள்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்களை இதனுடன் பகிர்ந்துள்ளேன். "பிரிட்டிஷ் காலனி" ஆட்சியை எதிர்த்து நாம் போராடிய போது சுதந்திர இந்தியக் கொடி பற்றி கனவு கண்டவர்களின் போற்றத்தக்க துணிவையும், முயற்சிகளையும் நாம் நினைவுகூர்வோம்.
அவர்கள் கனவுகண்ட இந்தியவை கட்டமைக்கவும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்.” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
