ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு அடிமாடுகளுடன் 42 கிலோ கஞ்சா கடத்தல் !

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு அடிமாடுகளுடன் 42 கிலோ கஞ்சா கடத்தல் !

எழுதியவர் J.கார்த்திக் Crime Reporter 

கரூர் ஊரக உட்கோட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய சரகம் பெரிய திருமங்கலம் பிரிவு ரோட்டில் அரவக்குறிச்சி வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் 13/10/2022 அன்று மாலை 6.15 மணியளவில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த TN 01 AZ 8680 லாரி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளா மாநிலம் பெரும்பிலாவு  என்ற இடத்திற்கு 22 எருமை மாடுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது எனவே லாரியை நிறுத்தி உள்ளே சோதனை செய்தபோது வெள்ளை சாக்கில் சுமார் 42 கிலோ எடை கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த தேனிமாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த (1) கௌதம் 27 (2) ராம்குமார் 29 (3) கரண் குமார் 23 ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாரிகளில் கேரளாவிற்கு இறைச்சிக்காக மாடுகளை கடத்துவது போன்ற தோற்றத்தில்  கஞ்சா, ஹெராயின், கோகோயின், உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உச்சநீதிமன்றம் பலமுறை சட்டவிரோதமாக லாரிகளில் மாடுகளை கடத்தினால் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மாடுகளை போலீசார் வழக்கில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

All Copy Rights www.republictamil.com