தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், பயிர் இனப்பெருக்கம்  உள்ளிட்ட 32 துறைகளுக்கும், 28 ஆராய்ச்சி படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்: 

விவரங்கள்  நாட்கள் 
TNAU இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 27.06.2022
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 08.08.2022 ( நள்ளிரவு 12 மணி வரை )
நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் 11.08.2022
மாதிரி மற்றும் ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 27.08.2022
தகுதிப் பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாள் செப்டம்பர் 2வது வாரம் 2022
சேர்க்கை மற்றும் கட்டணம் செலுத்த செப்டம்பர் 3வது வாரம் 2022
மழைக்கால செமஸ்டர் பாடத்துக்கு பதிவு செய்ய செப்டம்பர் 4வது வாரம், 2022

இதற்கான இணையதள முகவரி  : https://admissionsatpgschool.tnau.ac.in/