தமிழகத்தில் 92 கோடி கிலோ அரிசி மழையில் நனைந்து பாழாகின !

தமிழகத்தில் 92 கோடி கிலோ அரிசி மழையில் நனைந்து பாழாகின !

தமிழகத்தில் விசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து உடனுக்குடன் கிடங்குகளுக்கும் , அரிசி ஆலைகளுக்கும் அனுப்பப்படுவதில்லை. இதனால், நெல் மூட்டைகள் மழையில் நினைந்து பாழாகின்றன !

அதிக ஈரப்பதத்துடன் கூடிய நெல் மூட்டைகளை ஆலைகளுக்கு அனுப்பி, அரிசியாக மாற்றும்போது, தரமான அரிசி கிடைப்பதில்லை. இதன் விளைவாக, ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசியை வினியோகிக்கும்போது கார்டுதாரர்கள் வாங்குவதில்லை. இந்த புகார் சென்றதும், இந்திய உணவு கழகத்தின் அதிகாரிகள், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளில் ஆய்வு செய்து உள்ளனர். அங்கு, மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் 92.50 கோடி கிலோ அரிசி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதுபோன்ற பாழடைந்த அரிசி வழங்கிய ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்.

அந்த அரிசியை மனித பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது எனவும், தமிழக வாணிப கழக உயரதிகாரிகளை, மத்திய அரசு அதிகாரிகள் எச்சரித்தனர் !

இதுவரை, தரமற்ற அரிசியை சப்ளை செய்த தனியார் ஆலைகள் மீது, வாணிப கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், அந்த ஆலைகளுக்கு தொடர்ந்து அரிசியாக மாற்றித் தர நெல் மூட்டைகளை வழங்கியும் வருகிறது. இதற்கு, சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள், வாணிப கழக உயரதிகாரிகளை கவனிப்பு செய்த்தே காரணம் என புகார்கள் எழுந்துள்ளன.

முறைகேடுகுறித்து ; ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது; வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. தரமற்ற அரிசி தொடர்பாக புகார் எழும்போது, ரேஷன் ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கு எதிராக, ஊழியர்கள் போராடும் போது, கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தரமற்ற அரிசியை வினியோகித்த வாணிப கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ரேஷன் கடைக்கு தரமற்ற அரிசி வந்தால், அதை வினியோகிக்காமல் கிடங்குகளுக்கு அனுப்பவும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தரமற்ற அரிசியை திரும்ப அனுப்புவதை, வாணிப கழகம் ஏற்பதில்லை. ஆலைகளில் இருந்து தரமற்ற அரிசி சப்ளை போன்ற முறைகேடுகளில், வாணிப கழக அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக, அரசு தணி குழு அமைத்து விசாணைக்கு உத்தரவிட்டால், வாணிப கழக முறைகேடுகள் தெரியவரும். என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.