திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைக்க கோரிக்கை !

75வது சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுபடுத்தும் விதமாக கண்காட்சி ரயிலை விட்டுள்ளார்கள்.
அந்த ரயில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை அனைவரது பார்வைக்காகவும் நிறுத்தப்பட்டிருக்கும்.
அதற்காக திருப்பூர் ரயில் நிலையத்தின் பெயரை தற்காலிகமாக 'தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம்' என்று வைத்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பெயரை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று பொதுதுமக்களும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.கவினரும் மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பேருந்து நிலையத்தை அமைத்து அதற்கு கருணாநிதியின் பெயர் வைக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. அதை எதிர்த்து பா.ஜ.க & ஹிந்து இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின.
பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று திருப்பூர் மக்களின் விருப்பத்தை எடுத்துக் கூறினர்கள்.