பீகார் : போலி ரூபாய் நட்டு வழக்கு 22ம் தேதி தீர்ப்பு !

பீகார் மாநிலத்தில் உயர் பண மதிப்பு கொண்ட சுமார் இருபத்தைந்து லட்சரூபாய் போலி இந்திய ரூபாய் நோட்டு பார்சல் கடந்த 2015 செப்டம்பரில் பறிமுதல் செய்யப்பட்டது !
வெளிநாட்டில் இருந்து இந்தியவிற்கு கடத்தப்பட்டது என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த சையத் முஹமது ஷஃபி என்பவர் இந்த பார்சலை கூரியர் மூலம் அனுப்பியுள்ளார்.
இது நேபாளத்தைச் சேர்ந்த அபி முகமதுவிடம் ஒப்படைக்கப்பட இருந்தது. இந்த பார்சலை பெற முகமது அலி அக்தர் அன்சாரி என்பவர் வந்திருந்தார். இவர்களை காவல்துறை கைது செய்தது. பிறகு இவ்வழக்கை NIA விசாரனைக்கு எடுத்துக்கொண்டது.
NIA தனது முழுமையான விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான முகமது அலி அக்தர் அன்சாரி மற்றும் அபி முகமது ஆகியோர் மீது இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த பாட்னா NIA சிறப்பு நீதிமன்றம், அவர்களை குற்றவாளிகள் என அறிவித்தது.
அவர்களுக்கான தண்டனையின் விவரம் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என NIA சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.