ஆந்திரா : யுனெஸ்கோ பட்டியலில் லெபக்ஷி கோவில் !

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய தளங்களின் (WHS) தற்காலிக பட்டியலில் மூன்று புதிய கலாச்சார தளங்களை சேர்ப்பதன் மூலம், பாரதத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் வரலாறு மற்றும் கலாச்சார மற்றும் நாகரீக மதிப்புகளுக்கு மேலும் மதிப்பு கூடியுள்ளது.
மகாராஷ்டிராவின்கொங்கன் பகுதியில் உள்ள ஜியோ கிளிஃப்ஸ், மேகாலயாவின் ஜிங் கியெங் ஜ்ரி, வாழும் வேர் பாலம் மற்றும் ஆந்திராவில் உள்ள லெபக்ஷி கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ வீரபத்திரர் கோவிலின் நந்தி சிலை ஆகியவை இந்த தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
லெபக்ஷியில் உள்ள வீரபத்திரர் கோவில் விஜயநகர கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டதாகும். இக்கோவில் அகஸ்தியரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அங்கு இன்று இருப்பது 16ம் நூற்றாண்டில் வீரண்ணா மற்றும் விருபண்ணா சகோதரர்களால் விஸ்தரிக்கப்பட்ட
கோயில். இவ்விருவரும், விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பெனுகொண்டாவின் கருவூலத்தாரராக இருந்தவர்கள். இக்கோவில் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஒரே கல்லில்
கட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி, ஒரே கல்லில் செதுக்கிய பிரமாண்டமான ஏழு தலைகளுடைய நாகலிங்கச் சிலை, தரையை தொடாத தூண் என பல அதிசயங்கள் இங்குள்ளன.