புது தில்லி : துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் !

குடியரசு துணை தலைவராக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களித்தனர். அதில், பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளர் ஜகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஜன்தீப் தன்கர் குடியரசு துணை தலைவராக ஆகஸ்ட் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.