பாஜக தலைமையிலான NDA வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை அறிவித்தது பாஜக !

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA தனது துணை ஜனாதிபதி வேட்பாளரை வெளியிட்ட பிறகு - மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி "ஜக்தீப்தங்கரை "அரசியலமைப்பு நிபுணர் என்று அழைத்தார் மற்றும் மகிழ்ச்சியக இருப்பதாக கூறினார்.
வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை துணை ஜனாதிபதி வேட்பாளராக NDA அறிவித்தது குறித்து பேசிய சுவேந்து அதிகாரி, "ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசியலமைப்பின் பாதுகாவலராக பணியாற்றினார். இதை மனதில் வைத்து, அவரது மேம்பாட்டைக் கண்டு துணை ஜனாதிபதி ஆக ஒட்டுமொத்த வங்காளத்திலும் மகிழ்ச்சி அலை வீசுகிறது.அரசியலமைப்பு நிபுணர், உணர்வுள்ளவர், சட்ட அறிவு மிக்கவர், அபார அனுபவமுள்ளவர்.இவ்வளவு பெரிய அனுபவமுள்ள ஒருவருக்கு இரண்டாவது முக்கியமான பதவி கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற அவர் ஆற்றிய பணிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்." இது பெருமைக்குரிய விஷயம்': மீனாட்சி லேகி
'சட்டமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர் ஜக்தீப் தன்கர்': NDA வின் துணை வேட்பாளருக்கு பிரதமர் மோடி வாழ்த்து !
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோடும் இதற்கு பதிலளித்து, “முதல்முறையாக பழங்குடியின சமூகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதும், துணை ஜனாதிபதி வேட்பாளர் "OBC" சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயம்,
"துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 19 மற்றும் எம். வெங்கையா நாயுடுவுக்கு அடுத்தபடியாக துணை ஜனாதிபதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.