கேரள : RSS அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு !

கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம் பையனூரில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ( RSS ) அலுவலகம் மீது நேற்று 12/ 07 2022 அதிகாலையில் வெடிகுண்டு வீசப்பட்டது இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
10 ஆண்டுகளுக்கு முன்பு கமியூனிச குண்டர்களால் கொல்லப்பட்ட ஸ்வயம்சேவகர் ஒருவரின் நினைவாக ‘பலிதான் யாத்திரை’ நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்னதாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த உள்ளூர் மக்கள்,
முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் என கூறப்படும் தனராஜ் என்பவரின் தியாகி நிதியான ரூ.60 லட்சத்தை நிர்வகிப்பதில் கம்யூனிச கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். அந்த நிதியில் இருந்து இரண்டு சி.பி.எம் தலைவர்கள் ரூ. 42 லட்சத்தை எடுத்து வேறு நோக்கங்களுக்காக செலவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி பையனூரில் உள்ள CPM கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது.எனவே RSS அலுவலகம் மீதான இந்த வெடிகுண்டுத் தாக்குதல், இந்த மோசடியில் இருந்து கட்சித் தொண்டர்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவேதெரிகிறது’ என தெரிவித்தனர்.
தனராஜ் பல கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது வேறு விஷயம். இதுபோன்ற உட்கட்சி பிரச்சனைகளில் இருந்து தொண்டர்களின் கவனத்தை திசை திருப்ப, கம்யூனிச கட்சியினர் கேரளாவில், குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில்
இதுபோல ஏற்கனவே, RSS உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க அல்லது பிற எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொண்டர்களை CPM மற்றும் முஸ்லிம்